×

பேராவூரணி நூலகத்தில் மாணவ, மாணவிகளுக்கு நூலகவார விழா போட்டி

 

பேராவூரணி, நவ.19: பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் மாணவ, மாணவிகளுக்கு நூலக வாரவிழாவையொட்டி போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் நூலக வார விழா நடைபெற்றது. விழாவினையொட்டி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நூலகம் ஓர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் நல் நூலகர் விருது பெற்ற நூலகர் வேங்கடரமணி கலந்துகொண்டு பேசியது, நூலகம் ஓர் ஆலயம், நூல்களே தெய்வம். நல்ல நூல்கள் நம்மை வழி நடத்தும், நூல்கள் மூலம் பல்வேறு நாடுகளைக் குறித்தும், உலகில் இருந்து வரும் பல்வேறு பண்பாடுகளையும் அறிந்துகொள்ள முடியும். நூலகங்களில் தலைகுனிந்து படிப்பவர்களே உலகில் தலை சிறந்தவர்களாக மதிக்கப்படுகிறார்கள் என்று பேசினார்.

விழாவில் பெரியார் அம்பேத்கர் நூலக வாசகர் வட்டத்தைச் சேர்ந்த ஆயர் ஜேம்ஸ், ஆசிரியர் சிவக்குமார், டாக்டர் அருண்சுதேஷ், கவிஞர் கலைச்செல்வன், ஆசிரியர்கள் கிருத்திகா, ஆர்த்தி ஆகியோர் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். ஒருங்கிணைப்பாளர் மெய்ச்சுடர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

The post பேராவூரணி நூலகத்தில் மாணவ, மாணவிகளுக்கு நூலகவார விழா போட்டி appeared first on Dinakaran.

Tags : Library week festival ,Peravoorani ,Beravoorani ,Periyar Ambedkar Library ,Dinakaran ,
× RELATED திருச்சிற்றம்பலம் உழவர்...