×

மூதாட்டியை தாக்கிய தாய், மகனுக்கு வலை

ஏர்வாடி, நவ.19: ஏர்வாடி அருகே உள்ள வேப்பன்குளம் மேலூர், அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நம்பி மனைவி அன்னசுந்தரம் (70). இவரது மகன் ஆதிநாராயணன். ஆதிநாராயணனுக்கும், அவரது மனைவி விமலாவிற்கும் (38) கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று விமலா, அவரது மகன் கார்த்திக் (20) ஆகியோர் அன்னசுந்தரத்திடம் வீட்டை எழுதி தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு அன்னசுந்தரம் மறுத்ததாக தெரிகிறது.

இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த விமலா, கார்த்திக் ஆகியோர் சேர்ந்து அன்னசுந்தரத்தை கம்பால் தாக்கினர். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி விமலாவையும், அவரது மகன் கார்த்திக்கையும் தேடி வருகின்றனர்.

The post மூதாட்டியை தாக்கிய தாய், மகனுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Airwadi ,Nambi ,Annasundaram ,Amman Kovil Street, Vepankulam Melur ,
× RELATED ஏர்வாடி மெயின்ரோட்டில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்