×

தமிழ்நாட்டில் புதிதாக 150 மருத்துவமனைகள் திறப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை:தமிழ்நாடு முழுவதும் நேற்று 1000 சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதையொட்டி மயிலாப்பூர் தொகுதி நொச்சிகுப்பத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஜனவரி முதல் இன்று வரை டெங்குவால் 6777 பேர் பாதிப்பு அடைந்து உள்ளனர். 564 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குளிர் காய்ச்சல் (இன்புளூயன்சா) பாதிப்பு இருந்து வருகிறது. அதை கட்டுப்படுத்த மற்றும் பரிசோதனை செய்ய இந்த மருத்துவ முகாம் பயன்படுகிறது.

சென்னையில் 35 மருத்துவமனைகள் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் மற்ற பகுதிகளில் 120 மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவுபெற்று உள்ளது. இதற்கு மருத்துவ பணியாளர்கள் நியமிக்கும் பணி நடந்து வருகிறது. நியமன பணி நிறைவடைந்தவுடன் முதல்வர் கிட்டத்தட்ட 150 மருத்துவமனைகளை தொடங்கி வைத்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

* ‘யோகாவுக்கு தமிழ்நாடு முன்மாதிரி’
அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று 6வது இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே ஐந்து இந்திய மருத்துவ முறைகளுக்கும், அதற்குரிய அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. தமிழ்நாடு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது’’ என்றார்.

The post தமிழ்நாட்டில் புதிதாக 150 மருத்துவமனைகள் திறப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,M. Subramanian ,Chennai ,Monsoon Special Medical Center ,Nochikuppam, Mylapore ,
× RELATED நீட் தேர்வில் கருணை மதிப்பெண்...