×

நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி


இட்டாநகர்: மேற்குவங்கம் ஜபைல்குரியை சேர்ந்த ஆன்மீக தலைவர் ஒருவர் அசாமை சேர்ந்த தன் குழுவினர் 3 பேருடன் அருணாச்சலபிரதேசத்தின் மேல் சுபன்சுரி மாவட்டம் டம்போரிஜோவில் நடந்த 3 நாள் ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் 4 பேரும் ஒரு வாகனத்தில் இட்டா நகர் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் வாகனம் கம்லே மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேரும் உயிரிழந்து விட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.

The post நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Itanagar ,Zabailkuri, West Bengal ,Assam ,Arunachal Pradesh ,
× RELATED அருணாச்சலில் ஜூன் 2 காலை 6 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை