×

காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் 100 பிரபலங்களில் 9 பேர் இந்திய வம்சாவளிகள்: பட்டியலை வெளியிட்டது ‘டைம்’ பத்திரிகை

நியூயார்க்: காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் உலகின் 100 பிரபலங்களில் 9 இந்திய வம்சாவளிகளின் பெயரை டைம் பத்திரிகை வெளியிட்டுள்ளது.ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் 30ம் தேதி ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு தொடங்குகிறது. அதற்கு முன்னதாக காலநிலை மாற்றத்தை தடுக்கும் வகையில் செயல்படும் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலை ‘டைம்’ பத்திரிகை (அமெரிக்காவில் இருந்து வெளியாகிறது) தயாரித்துள்ளது.

அதன்படி உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பெயர் பட்டியலை பிரபல ‘டைம்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. வணிக உலகில் தொடங்கி இசை உலகம் வரை பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில், உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா, ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் பவிஷ் அகர்வால், தி ராக்பெல்லர் அறக்கட்டளையின் தலைவர் ராஜீவ் ஜே ஷா, பாஸ்டன் பொது சொத்து மேலாண்மை நிறுவனர் கீதா ஐயர், யுஎஸ் எனர்ஜி லோன் திட்ட அலுவலக இயக்குநர் ஜிகா ஷா, ஹஸ்க் பவர் சிஸ்டம்ஸ் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் மனோஜ் உள்ளிட்ட ஒன்பது பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் உலக வங்கி குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா, பருவநிலை மாற்றத்தை எதிர்த்தும், வறுமையை ஒழிப்பதற்கான புதிய பணியைத் தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் 100 பிரபலங்களில் 9 பேர் இந்திய வம்சாவளிகள்: பட்டியலை வெளியிட்டது ‘டைம்’ பத்திரிகை appeared first on Dinakaran.

Tags : NEW YORK ,TIME MAGAZINE ,United ,
× RELATED 20 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட கார்: அமெரிக்காவில் 3 இந்திய பெண்கள் பலி