×

நெல்லை மறை மாவட்ட ஆசிரியர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவிடக் கோரி வழக்கு: அறிக்கை தர ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நெல்லை மறை மாவட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. நெல்லை மறை மாவட்ட சங்கத்துக்குட்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்களாக திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த எழில் உட்பட 4 பேர் பணியாற்றி வருகின்றனர். உரிய பயிற்சி பெற்ற பின்பு பள்ளிகளில் நிரந்தரமான ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவார்கள் என்று நிலை உள்ளது.

இதனடிப்படையில் பள்ளிக் கல்வித்துறை அனுமதி தராமல் உள்ளதாகவும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை 2ம் நிலை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் எனவும் 2017 முதல் உரிய பணப்பலன்களை வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணை இன்று வந்தது , வழக்கை விசாரித்த நீதிபதி 2018-20 வரை நெல்லை மாவட்டத்தின் உபரி ஆசிரியர்கள் எத்தனை பேர்? என எண்ணிக்கையை குறிப்பிட்டு அறிக்கை தரவும் வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

The post நெல்லை மறை மாவட்ட ஆசிரியர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவிடக் கோரி வழக்கு: அறிக்கை தர ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Nella Makhar district ,Eicourt ,Madurai ,Nella ,Magar ,Rice ,Nelala Makhar district ,iCourt ,Dinakaran ,
× RELATED ஜாமின் நிறுத்திவைக்கப்பட்டதை...