×

மீன்வள பல்கலை.க்கு ஜெயலலிதா பெயர் சூட்ட ஆளுநர் ஒப்புதல் தரவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: மீன்வள பல்கலை.க்கு ஜெயலலிதா பெயர் சூட்ட ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்த நிலையில், அதிமுக ஆட்சியில் 2, திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் என 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக குறிப்பிட்டு ஆளுநர் கடந்த 13ம் தேதி அதை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார்.

இந்நிலையில் ஆளுநர் அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று தொடங்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரில் 10 சட்டமசோதாக்கள் மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. சட்டமசோதா நிறைவேற்ற படும்போது, அதன் மீதான விவாதத்தில் பிற கட்சி உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை முன்மொழிந்தனர். முதல்வர் கொண்டு வந்த தீர்மானங்கள் மீது எதிர்ப்பு தெரிவித்து பாஜக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு செய்தது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் தங்கள் கருத்து குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது ,தீர்மானம் நிறைவேற்றப்படும்போது அவையில் இருக்கக் கூடாது என்பதற்காகவே அதிமுக வெளிநடப்பு செய்ததாகவும். பெயரளவில் ஒரு காரணத்தை கூறி அதிமுக வெளிநடப்பு செய்திருப்பது உள்நோக்கம் கொண்டது. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக பெயர் மாற்றப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது பொய். 2012ல் உருவாக்கப்பட்ட மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு 2020ல் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டது.

மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதாவின் பெயரை சூட்டுவதற்கான மசோதாவுக்கே ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. ஜெயலலிதா பெயரை சூட்டுவதற்கான மசோதாவுக்கு ஒப்புதலைப் பெற அப்போதைய அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீள்வளப் பல்கலை.க்கு ஜெயலலிதா பெயரை வைத்து 2020ல் அதிமுக அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கே ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. ஆளுநர் ஒப்புதல் தராததால் பெயர் மாற்றம் நடைமுறைக்கு வரவில்லை. மீன்வளப் பல்கலை.க்கு ஜெயலலிதா பெயர் சூட்ட ஆளுநர் ஒப்புதல் தராததால் அதற்கு முன் இருந்த பெயரிலேயே மசோதா கொண்டு வரப்பட்டது. மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயரை சூட்டுவதற்கான மசோதாவையும் இன்று மீண்டும் நிறைவேற்றி உள்ளோம். எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்திருப்பது முழுக்க முழுக்க அரசியல். கூட்டணி முறிந்தாலும் அதிமுக-பாஜக இடையே ரகசியத் தொடர்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.

 

The post மீன்வள பல்கலை.க்கு ஜெயலலிதா பெயர் சூட்ட ஆளுநர் ஒப்புதல் தரவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Tags : University of Fisheries ,Jayalalitha ,Minister Gold ,South India ,Chennai ,Governor ,Minister Gold South Rasu ,Minister Gold of South ,India ,
× RELATED 5 நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர்...