×

சாலையில் மயங்கிக் கிடந்த முதியவரை மீட்டு சிகிச்சை அளித்து பத்திரமாக ஒப்படைத்த போலீசார்

பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 15ம் தேதி ஒருவர் மயக்க நிலையில் கிடப்பதாக பேசின் பிரிட்ஜ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனே ஏட்டு சரத்குமார் தலைமையில் போலீசார் சென்று அங்கு மயங்கிய நிலையில் கிடந்த நபரை மீட்டு உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதன்பிறகு அவரை புகைப்படத்தை பற்றிய தகவலுடன் அனைத்து காவலர்கள் வாட்ஸ்அப் குரூப்பிலும் பதிவு செய்தனர். இதையடுத்து பூக்கடை காவல் நிலைய போலீசார் தொடர்புகொண்டு அந்த குறிப்பிட்ட நபர் காணாமல் போனதாக பூக்கடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் என்று தெரிவித்தனர்.இதையடுத்து ஏட்டு சரத்குமார் நடத்திய விசாரணையில், ‘’அந்த நபர் மேற்குவங்க மாநிலத்தில் இருந்து சிகிச்சைக்காக சென்னை வந்துள்ளார் என்பதும் அவரது பெயர் சையது நூர் ஜமால் (56) என்பதும் தெரிய வந்தது.

அவரை கடந்த 4 நாட்களாக காணவில்லை என்று உறவினர்கள் புகார் அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து பூக்கடை போலீசார், சையத் நூர் ஜமாலின் உறவினர்களை ஸ்டான்லி மருத்துவமனைக்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டபோது காணாமல் போன நபர்தான் என்று உறுதிப்படுத்தப்பட்டது. இதன்பிறகு சையத் நூர் ஜமாலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

வயதான நபரை காப்பாற்றியதுடன் உரிய முறையில் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனையில்அனுமதித்து குடும்பத்தினர் ஒப்படைத்த ஏட்டுவுக்கு நன்றி தெரிவித்துகொண்டனர்.

The post சாலையில் மயங்கிக் கிடந்த முதியவரை மீட்டு சிகிச்சை அளித்து பத்திரமாக ஒப்படைத்த போலீசார் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Pulyanthoppu Basin Bridge Police Station, Chennai ,
× RELATED பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் மெட்ரோ...