×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றம்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்கள் மற்றும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் என 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக குறிப்பிட்டு ஆளுநர் கடந்த 13ம் தேதி அதை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானத்தை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது. சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 10 சட்டமுன்வடிவுகளும் மறுஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றம்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mu. K. ,STALIN ,Chennai ,Chief Minister of ,Tamil Nadu Legislative Assembly ,K. ,
× RELATED மேல்சேவூர் அருகே அரசு பேருந்து...