×

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை ஆளுநர் மதிக்கவில்லை: பேரவையில் ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை ஆளுநர் மதிக்கவில்லை என்று பேரவையில் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தை மனிதநேய மக்கள் கட்சி ஆதரிக்கிறது. அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. ஆளுநர் பதவியை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்வது ஜனநாயகத்திற்கு விரோதமானது. சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் மறுத்தது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று ஜவாஹிருல்லா தெரிவித்தார். முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

The post ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை ஆளுநர் மதிக்கவில்லை: பேரவையில் ஜவாஹிருல்லா கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Governor ,Tamil Nadu ,Jawahirulla ,Barawah ,Chennai ,Jawahirullah ,Berawa ,
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...