×

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடமை தவறிவிட்டார்: பேரவையில் வேல்முருகன் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடமை தவறிவிட்டதாக பேரவையில் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரிக்கிறது. பெரியார், அண்ணா, கலைஞர் என்ற பெயரை கேட்டாலே ஆளுநருக்கு கசக்குகிறது. உச்சநீதிமன்ற கண்டனத்தையும் பொருட்படுத்தாமல் ஆளுநர் செயல்படுவதாக வேல்முருகன் விமர்சனம் செய்தார். தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை என்றும் வேல்முருகன் கூறினார்.

The post தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடமை தவறிவிட்டார்: பேரவையில் வேல்முருகன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Governor ,Velmurugan ,Chennai ,Chief Minister of ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை...