×

மதுரை ஆவின் நிறுவனம் சார்பில் பால் உற்பத்தியை அதிகரிக்க கறவை மாடு லோன் மேளா

மதுரை, நவ. 18: மதுரை ஆவின் நிறுவனம் சார்பில், பால் உற்பத்தியை அதிகரிக்க கறவை மாடு லோன் மேளா நடக்கிறது என, பொது மேலாளர் சிவகாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: மதுரை ஆவின் நிறுவனம் சார்பில், பால் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், வங்கிகளுடன் இணைந்து கறவை மாட்டுக்கடன் வழங்கும் லோன் மேளாக்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக இன்று (நவ.18) செக்கானூரணி, செல்லம்பட்டி ஒன்றிய பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் லோன்மேளா நடைபெற உள்ளது. எனவே, ஆவினுக்கு பால் வழங்கும் செல்லம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பால் உற்பத்தியாளர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு, பால் மாட்டுக் கடன் பெற்று பால் உற்பத்தியை அதிகரிப்பதுடன், தங்களது வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த லோன் மேளா செக்கானூரணி – உசிலம்பட்டி சாலையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெறுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post மதுரை ஆவின் நிறுவனம் சார்பில் பால் உற்பத்தியை அதிகரிக்க கறவை மாடு லோன் மேளா appeared first on Dinakaran.

Tags : Madurai Awan ,Madurai ,MILK COW LOAN ,MELA ,Madurai Awan Company ,Dinakaran ,
× RELATED இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை...