×

சாமந்திப்பூ விலை உயர்வு

ராயக்கோட்டை, நவ.18: ராயக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பரவலாக சாமந்தி பூக்களை சாகுபடி செய்துள்ளனர். ஆயுத பூஜையின் போது, கிலோ சாமந்திப்பூ ₹250 வரை விற்பனையானது. அதற்கு பின்னர், ேதவை குறைந்ததால் விலை கடுமையாக சரிந்து, கிலோ ₹10க்கு விற்பனையானது. ெதாடர்ந்து, மேலும் விலை சரிந்து கிலோ கணக்கில்லாமல் மூட்டைப்பூ ₹200 முதல் ₹300 வரை விற்பனையானது. இதனால் சில விவசாயிகள் பூக்களை பறிக்காமல், தோட்டத்திலேயே விட்டனர். இந்நிலையில், நேற்று கார்த்திகை மாதம் பிறந்ததாலும், தொடர்ந்து முகூர்த்த நாட்கள் இருப்பதாலும், சாமந்தி பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பூ ₹100க்கு விற்பனையானது.

The post சாமந்திப்பூ விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Rayakottai ,Ayudha ,
× RELATED பச்சை மிளகாய் சாகுபடி அதிகரிப்பு