சிவகாசி, நவ.18: தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து என்ற மாபெரும் நிகழ்வை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் நீட் விலக்கு கோரி கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறார். மாநில சிறுபான்மை நல உரிமைப்பிரிவு செயலாளர் அ.சுபேர்கான், விருதுநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரின் ஆலோசனை படி நேற்று சிவகாசி பெரிய பள்ளி வாசல் முன்பு விருதுநகர் வடக்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமைப்பிரிவு சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மாவட்ட அமைப்பாளர் செல்லத்துரை தலைமை விகித்தார். வடக்கு மாவட்ட தலைவர் கே.ஏ.எம்.கே.முகமது மதார் மரைக்காயர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிவகாசி மாநகர செயலாளர் உதயசூரியன் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். துணை அமைப்பாளர்கள் முகமது முஸ்தபா, சிக்கந்தர் சேட், சாதிக்அலி, நாகூர்கனி மற்றும் பகுதி கழகச் செயலாளர் காளிராஜன், அப்துல் முத்தலிப், பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், மாநகர்மன்ற உறுப்பினர் எம்எஸ்எல் ஜெயினுலாபுதீன், வட்டக் கழகச் செயலாளர் ஜக்கரியா உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பில் நீட் விலக்கு கோரி கையெழுத்து இயக்கம் appeared first on Dinakaran.
