×

பெரம்பலூர் /அரியலூர் விபத்துக்கள் அதிகரிப்பதால் திருச்சி- செங்கல்பட்டு நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்

 

பெரம்பலூர்,நவ.18: திருச்சி முதல் செங்கல்பட்டு வரையுள்ள தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்து நடை பெறுவதால் நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே சிவசேனா கட்சி சார்பில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேவின் 11ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது.

திருச்சி மண்டலத் தலைவர் பரஞ்சோதி தலைமை வகித்தார். இதில் ஏராளமான கட்சியினர் பால் தாக்கரே உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருச்சி முதல் செங்கல்பட்டு வரையுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெருக்கடியில் தொடர்ந்து விபத்து நடை பெறுவதால் அதனைத் தடுக்க நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் கல் குவாரி கள் அளவுக்கு அதிகமாக தோண்டப்பட்டு வருகிறது.

அதனை தடுத்து மழைநீர் சேமித்து நிலத்தடி நீரை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு உதவ வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை உயர்வைக் குறைக்க வேண்டும். அறநிலையத் துறையில் உள்ள நிலங்களை மீட்டெடுத்து அனைத்து சமூகத்தை சேர்ந்த நிலமற்ற விவசாயிகளுக்கு அந்த நிலங்களை குத்தகைக்கு வழங்க வேண்டும். சிவசேனா கட்சி நிறுவன தலைவர் பால் தாக்கரேவின் கனவான இந்தியாவை இந்துஸ்தான் ஆக மாறும் வரை குரல் கொடுப்போம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post பெரம்பலூர் /அரியலூர் விபத்துக்கள் அதிகரிப்பதால் திருச்சி- செங்கல்பட்டு நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Aryalur ,Trichi-Chengalpattu highway ,NATIONAL HIGHWAY ,TRICHI ,CHENGALPATU ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...