×

ஆண்டிமடத்தில் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

 

ஆண்டிமடம், நவ.18: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி வழங்காத ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆண்டிமடம் இந்தியன் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சங்கர் தலைமை வகித்தார்.வட்டார தலைவர்கள் சாமிநாதன், ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர் பாலு, பொதுச்செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகரன் கண்டன உரையாற்றினார்.

தொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்திற்கு உடனடியாக நிதியை வழங்கிடு போன்ற கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வர்த்தக அணி வட்டார தலைவர் பழக்கடை செல்வம், விவசாய அணி மாவட்ட துணை தலைவர் சண்முகம், மாவட்ட துணை தலைவர் வீரமணி, வட்டார தலைவர்கள் எஸ்டி பிரிவு சபரிநாதன், ராஜபாண்டியன், இளைஞர் காங்கிரஸ் மணிகண்டன், வீரபாண்டியன் மற்றும் திருக்களப்பூர் செல்வராஜ், கண்ணன், பாலசுப்பிரமணியன், சண்முகம், குழந்தை தர்மராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ஆண்டிமடத்தில் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Union BJP government ,Andimadam ,Antimadam ,Ariyalur District Andimadam District Congress Party ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு...