×

ஆற்றூர் வில்லுண்ணிகோணம் அரசு பள்ளி ஆண்டு விழா

குலசேகரம், நவ.18: ஆற்றூர் வில்லுண்ணிகோணம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை ஜெயா தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சிவகலா முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் சேம்பிரின்ஸ் குமார் வரவேற்றார். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுனு, ஆற்றூர் பேரூர் திமுக செயலாளர் சோழராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், குமரி மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிந்துகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினர். பட்டதாரி ஆசிரியை லிஜா நன்றி கூறினார்.

The post ஆற்றூர் வில்லுண்ணிகோணம் அரசு பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Thiyoor Villunnikonam Government School Annual Festival ,Kulasekaram ,Government High School ,Villunnikonam ,Thiyoor ,Headmistress ,Jaya ,Thiyoor Villunnikonam Government School Annual Celebration ,Dinakaran ,
× RELATED குலசேகரம் அருகே பழங்குடியின பெண்...