×

அதானிக்காக தாராவி மறுசீரமைப்பு திட்ட விதிகளில் மாற்றம்: பாஜ மீது காங். கடும் தாக்கு

புதுடெல்லி: அதானி குழுமம் பலன் அடைவதற்காக மும்பை தாராவி மறுசீரமைப்பு திட்டத்தில் விதிமுறைகளை பாஜ அரசு தளர்த்தியுள்ளது என காங்கிரஸ் பொது செயலாளர் ஜெயராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். மும்பையில் உள்ள தாராவி குடிசை பகுதியை மறுசீரமைப்பு செய்வதற்கான பணிகள் அதானி குழுமத்துக்கு மகாராஷ்டிரா பாஜ அரசு வழங்கியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில் பதிவிடுகையில்,தாராவி மறுசீரமைப்பு திட்டம் தொடர்பாக,மாநில நகர்ப்புற மேம்பாட்டு துறை தாராவியின் ரியல் எஸ்டேட் மாற்றத்தக்க மேம்பாட்டு உரிமைகளில்(டிடிஆர்) குறியீட்டை நீக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி அனைத்து பில்டர்களும் தங்களது 40 சதவீத டிடிஆர்களை அதானியிடம் இருந்துதான் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. தாராவி மறுசீரமைப்பு திட்டத்தை அதானி குழுமம் ரூ. 5,069 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. 2018ல்எடுக்கப்பட்ட விலையை விட ரூ.2131 கோடி குறைவாக கேட்ட அதானிக்கு எவ்வாறு ஏல உரிமை வழங்கப்பட்டது என பிரதமர் மோடியிடம் கேட்டோம். தாராவி போன்ற குறைந்த நில மதிப்பு கொண்ட பகுதிகளில் உருவாக்கப்படும் டிடிஆர் உரிமைகள் வீடுகளின் விலையை மேலும் அதிகரிக்க செய்யும். இந்த கொள்கை மாற்றம் பிரதமருக்கு மிகவும் நெருக்கமான தொழில் குழுமத்துக்கு வழங்கப்பட்ட இன்னொரு இலவச சலுகை என குறிப்பிட்டுள்ளார்.

The post அதானிக்காக தாராவி மறுசீரமைப்பு திட்ட விதிகளில் மாற்றம்: பாஜ மீது காங். கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Adani ,Congress ,BJP ,New Delhi ,BJP government ,Mumbai ,Dharavi ,Dinakaran ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...