×

உ.பி.யில் சட்டவிரோதமாக மைனர் பெண்களின் கருமுட்டை விற்பனை: 4 பேர் கைது

வாரணாசி: உத்தரப்பிரதேசத்தில் ஜெய்ப்புரா பகுதியை சேர்ந்த 17வயது பெண்ணின் தாயார், கருத்தரித்தல் மையத்தில் சட்டவிரோதமாக கருமுட்டை தானமாக பெறப்படுவதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரில் கருமுட்டை பெறுவதற்காக ரூ.30ஆயிரம் தருவதாக கூறப்பட்டதாகவும், ஆனால் ரூ.11,500மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தார்.

இதனை தொடர்ந்து தம்பதி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘பணம் தருவதாக கூறி மைனர் பெண்களை கவர்ந்து, அவர்கள் கருமுட்டை தானம் செய்வதற்கு தகுதியான வயதுடையவர்கள் என்பது போன்று போலி சான்றிதழை தயாரித்து தந்துள்ளனர். அவர்களது கருமுட்டைகள் பிரபல கருத்தரித்தல் மையத்துக்கு அதிக பணத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது” என்றார்.

The post உ.பி.யில் சட்டவிரோதமாக மைனர் பெண்களின் கருமுட்டை விற்பனை: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Varanasi ,Jaipura ,Uttar Pradesh ,UP ,
× RELATED காசி விஸ்வநாதர் கோயிலில் போலீசுக்கு காக்கிக்கு பதில் காவி உடை