×

எந்தவொரு நாட்டின் ஒரு அங்குல நிலம் கூட ஆக்கிரமிக்கவில்லை: அமெரிக்காவில் சீன அதிபர் பேட்டி


வாஷிங்டன்: எந்தவொரு நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை என்று அமெரிக்காவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேட்டியளித்தார். ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்கா சென்றார். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், ‘எங்களது அரசானது இன்றுவரை எந்தவொரு ேமாதலையும், போரையும் தூண்டவில்லை.

எந்தவொரு நாட்டின் ஒரு அங்குலம் நிலத்தையும் கூட சீனா ஆக்கிரமித்ததில்லை’ என்று கூறினார். முன்னதாக ஜி ஜின்பிங்குடனான சந்திப்பின் போது, ​​சின்ஜியாங், திபெத், ஹாங்காங் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அவருடன் கவலையை பகிர்ந்து கொண்டார். இந்த சந்திப்புக்கு பிறகு இரு நாடுகளிலும் பதற்றம் குறையும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

கடந்த 1962ம் ஆண்டு இந்தியா – சீனா இடையே நடந்த போரின் போது, இந்தியாவின் ‘அக்சாய் சின்’ பகுதியை சீனா ஆக்கிரமித்தது. அப்போது இருந்தே இந்திய – சீன எல்லை பிரச்னைகள் தொடர்கின்றன. அப்பேற்பட்ட நிலையில், எந்தவொரு நாட்டின் ஒரு அங்குல நிலத்தையும் சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் பேசியிருப்பது அரசியல் ரீதியாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

The post எந்தவொரு நாட்டின் ஒரு அங்குல நிலம் கூட ஆக்கிரமிக்கவில்லை: அமெரிக்காவில் சீன அதிபர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : United States ,Washington ,President ,Xi Jinping ,
× RELATED எச்1பி விசா, கிரீன் கார்டு நடைமுறையை...