×

சுரங்கப்பாதை மீட்பு பணிக்கு அதிநவீன அமெரிக்க ‘ஆகர்’ இயந்திரம்: தாய்லாந்து குழுவும் வருகை


உத்தரகாசி: உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்புப் பணிக்கு அதிநவீன அமெரிக்க ஆகர் இயந்திரம் பயன்படுத்தப்படுவதாகவும், தாய் லாந்து குழுவும் வந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உத்தரகாசி போலீஸ் எஸ்பி அர்பன் யதுவன்ஷி கூறுகையில், ‘சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்கப் பயன்படுத்தப்படும் அதி நவீன அமெரிக்க ‘ஆகர்’ இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இன்றைய நிலையில் சுரங்கப்பாதைக்குள் நான்கு குழாய்கள் செருகப்பட்டு, ஐந்தாவது குழாய் செருகுவதற்கான வெல்டிங் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கான ‘ஆகர்’ இயந்திரம் நன்றாக செயல்படுகிறது.

இந்தப் பணிகள் மேற்கொள்ளும் போது, மேலும் இடிபாடுகள் ஏதும் ஏற்படாமல் இருந்தால் புதியதாக உருவாக்கப்படும் சுரங்கப்பாதையின் மூலம் தொழிலாளர்களை மீட்க முடியும். இந்த மீட்புப் பணி ஆபரேஷன் எப்போது முடிவடையும் என்று காலக்கெடு எதுவும் கொடுக்க முடியாது. தொழில்நுட்ப பணியாளர்கள் 24 மணி நேரமும் கடுமையாக போராடி வருகின்றனர். விரைவில் மீட்புப் பணி முடிவடையும் என்று நம்புகிறேம். உள்ளே சிக்கியுள்ள அனைவரும் மீட்கப்படுவார்கள்’ என்று கூறினார். இதுமட்டுமின்றி சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக தாய்லாந்து குழுவினரும் வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

The post சுரங்கப்பாதை மீட்பு பணிக்கு அதிநவீன அமெரிக்க ‘ஆகர்’ இயந்திரம்: தாய்லாந்து குழுவும் வருகை appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Uttarakhis ,Dinakaran ,
× RELATED டெல்லியில் உள்ள எய்ம்ஸ்...