×

சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி நடைபெறவுள்ள பார்முலா 4 கார் பந்தயம்; போக்குவரத்து மாற்றம்..!!

சென்னை: சென்னையில் அடுத்த மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறவுள்ள பார்முலா 4 கார் பந்தயத்திற்காக சாலையை தயார் செய்ய தீவுத்திடலை ஒட்டி இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ளது. டிச.9, 10ம் தேதிகளில் போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்துகிறது. இதன் காரணமாக அங்குள்ள சாலைகளை பந்தயச் சாலைகளாக உருவாக்கும் பொருட்டு இன்று முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. போர் நினைவிடத்தில் இருந்து வாலாஜா சந்திப்பு வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

அவ்வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் சென்று பாரீஸ் கார்னர் வழியாக உரிய இடத்தை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்துசாமி பாலத்திலிருந்து கொடிமர சாலை நோக்கி வாகனங்கள் வழக்கம்போல் செல்லலாம். இன்று இரவு தொடங்கி வரும் டிசம்பர் 1ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அண்ணாசாலை, சுவாமி சிவானந்தா சாலை, காமராஜர் சாலைகள் குறுகலாக்கப்பட்டாலும் வழக்கம்போல் வாகனங்கள் செல்லலாம். குறுகலாக்கப்பட்ட சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல தடையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி நடைபெறவுள்ள பார்முலா 4 கார் பந்தயம்; போக்குவரத்து மாற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Formula 4 car ,Chennai Island Stadium ,Chennai ,Chennai Pilgrimage Ground ,Dinakaran ,
× RELATED தீவுத்திடலை சுற்றி ஜூனுக்கு பிறகு...