×

‘எழுத்து’ தமிழிலக்கிய அமைப்பு சார்பில் நாவல் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு ரூ.2லட்சம் பரிசு: ப.சிதம்பரம் நாளை வழங்குகிறார்

‘எழுத்து’ தமிழிலக்கிய அமைப்பு சார்பில் நாவல் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு ரூ.2லட்சம் பரிசு: ப.சிதம்பரம் நாளை வழங்குகிறார்சென்னை: ‘எழுத்து’ தமிழிலக்கிய அமைப்பு சார்பில் நாவல் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு ரூ.2லட்சம் பரிசு தொகையை ப.சிதம்பரம் நாளை வழங்குகிறார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரம் எம்பி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘எழுத்து’ தமிழிலக்கிய அமைப்பு ஆண்டுதோறும் நாவல் போட்டி நடத்தி பரிசு பெறும் எழுத்தாருக்கு, ‘சவுந்திரகைலாசம் இலக்கிய பரிசு’ என்ற பெயரில் ரூ.2,00,000 பரிசு வழங்கி வருகிறது.

கடந்த ஆண்டு நாவல் போட்டியின் நடுவர்களாக எழுத்தாளர் மீரான் மைதீன், கவிஞர் கவிப்பித்தன், முனைவர் கவிஞர் ஆதிரா முல்லை ஆகியோர் பணியாற்றினர். போட்டிக்கு வந்த அனைத்து நூல்களையும் படித்து, பரிசீலித்து அறங்காவலர் குழுவினர் ஒப்புதலுடன் எழுத்தாளர் ஷாராஜ் எழுதிய ‘நீர்க்ெகால்லி’ எனும் நாவலை பரிசுக்குரியதாக தேர்வு செய்துள்ளனர்.

பரிசு பெறும் எழுத்தாளர் ஷாராஜ்க்கு எனது வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றி. நாளை மாலை 5 மணி அளவில் சென்னை தி.நகர் சர்.பி.டி.தியாகராயர் அரங்கில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழாவுக்கு அனைவரையும் ‘எழுத்து‘ அறங்காவலர் குழு சார்பான வரவேற்கிறேன்.

 

The post ‘எழுத்து’ தமிழிலக்கிய அமைப்பு சார்பில் நாவல் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு ரூ.2லட்சம் பரிசு: ப.சிதம்பரம் நாளை வழங்குகிறார் appeared first on Dinakaran.

Tags : P. Chidambaram ,Ehuthu' Tamil Literary Organization ,P.Chidambaram ,Ehuthu' Tamil Literature Organization ,Chennai ,Ehuthu' Tamil Literature ,
× RELATED காங். தேர்தல் அறிக்கை குறித்து...