×

கவுதம் அதானி குழும நிறுவனம் மீதான நிலக்கரி இறக்குமதி முறைகேடு வழக்கில் வருவாய் புலனாய்வு பிரிவு புதிய மனு..!!

டெல்லி: கவுதம் அதானி குழும நிறுவனம் மீதான நிலக்கரி இறக்குமதி முறைகேடு வழக்கில் வருவாய் புலனாய்வு பிரிவு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. நிலக்கரி இறக்குமதி முறைகேடு வழக்கு தொடர்பான ஆதாரங்களை சிங்கப்பூரில் இருந்து பெற அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து குறைந்த விலைக்கு நிலக்கரியை வாங்கி, இந்திய அரசு நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்றதாக வழக்கு தொடரப்பட்டது.

கொள்முதல் விலையை விட மிக அதிக விலைக்கு நிலக்கரியை இந்தியாவில் விற்று அதானி கொள்ளை லாபம் சம்பாதித்ததாக புகார் எழுந்தது. அதானி நிறுவனத்தின் நிலக்கரி இறக்குமதி முறைகேடு தொடர்பான ஆதாரங்களை சிங்கப்பூரில் இருந்து திரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் சிங்கப்பூர் நீதிமன்றங்களை அணுகி ஆவணங்களை பெற புலனாய்வு பிரிவு திட்டமிட்டுள்ளது.

நிலக்கரி இறக்குமதி முறைகேடு நடந்தது எப்படி?

இந்தோனேசியாவில் இருந்து அதானி குழுமம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மூலம் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்த நிலக்கரி முகமூடி நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு அவற்றின் மூலம் மறுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தோனேசிய நிறுவனம் வழங்கிய பில்கள் மாற்றப்பட்டு முகமூடி நிறுவனங்களின் பில்களை மட்டுமே காட்டி முறைகேடு அரங்கேறியுள்ளது.

இந்தோனேசிய நிறுவனங்கள் தரும் ஒரிஜினல் பில்களை புலனாய்வு அமைப்பு பெற முடியாதபடி அதானி நிறுவனம் தடுக்கிறது. இந்தோனேசிய நிறுவனங்களுக்கு அதானி நிறுவனம் செலுத்திய கட்டண விரைப் பெறுவதையும் அதானி நிறுவனம் தடுக்கிறது. அதானி நிறுவன முறைகேடுகளை நிரூபிக்க, அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்கு விபரம் பெறவும் புலனாய்வு பிரிவு முயற்சி செய்து வருகிறது.

நிலக்கரி இறக்குமதியில் பல ஆயிரம் கோடி லாபம்:

குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்து விலையை பலமடங்கு உயர்த்தி அதானி குழுமம் லாபம் அடைந்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. நிலக்கரி இறக்குமதி முறைகேடு மூலம் பல ஆயிரம் கோடி அளவுக்கு அதானி குழுமம் லாபம் அடைந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்து விலையை பலமடங்கு உயர்த்தி அதானி குழுமம் லாபம் அடைந்திருக்கிறது. 2014-ல் அதானி குழுமம் புதிதாக 400 நிறுவனங்களை தொடங்கி அவற்றின் மூலம் இந்தோனேசியாவில் நிலக்கரி வாங்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

புதிதாக தொடங்கிய 400 நிறுவனங்கள் மூலம் 1300 கப்பல் நிலக்கரியை அதானி குழுமம் இறக்குமதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுத்துறை மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு கொள்ளை விலையில் நிலக்கரியை அதானி நிறுவனம் விற்றதாக கூறப்படுகிறது. அதிக விலைக்கு நிலக்கரியை வாங்கி மின்னுற்பத்தி செய்த பொதுத்துறை நிறுவனங்கள் மின் கட்டணத்தை மக்களிடம் வசூலித்துள்ளன. அதானி குழுமத்தின் நிலக்கரி இறக்குமதி முறைகேட்டால் மின்சாரத்துக்கு பொதுமக்கள் அதிக கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது.

The post கவுதம் அதானி குழும நிறுவனம் மீதான நிலக்கரி இறக்குமதி முறைகேடு வழக்கில் வருவாய் புலனாய்வு பிரிவு புதிய மனு..!! appeared first on Dinakaran.

Tags : Revenue Investigation Division ,Gautam Adani Group Company ,Delhi ,Revenue Intelligence Unit ,Gautam Adani Group Co. ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்தில்...