×

சாமியே சரணம் ஐயப்பா” என்ற பக்தி கோஷம் முழங்க மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

கேரளா: கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். இதற்காக கார்த்திகை மாதம் முதல் நாளான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள்.

அதிகாலையிலேயே புனித நீராடி கோயில்களுக்கு சென்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர். அதன்படி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் வடபழனி என்றழைக்கப்படும் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலை மீது அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள்.குருக்கள் மற்றும் குருசாமிகள் பக்தர்களுக்கு மாலை அணிவித்தார்கள். இதையொட்டி தண்டாயுதபாணி கோயிலுக்கு திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.

The post சாமியே சரணம் ஐயப்பா” என்ற பக்தி கோஷம் முழங்க மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Ayyappa ,Kerala ,Sabarimala Ayyappan ,Mandal Pooja ,Makara Lampu Festivals ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...