×

கண்கொள்ளா காட்சி!: கோடியக்கரை சரணாலயத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள்.. கூட்டம், கூட்டமாக சிறகடித்து உற்சாகம்..!!

நாகை: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் வருகை தந்துள்ளன. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்து கோடியக்கரை பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பறவைகளின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலங்களில் ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அங்கு நிலவும் குளிரை போக்கும் வகையில் 247 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.

தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், கோடியக்கரை பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் நீர் நிலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு செங்கால் நாரை, கூழைகிடா, பூநாரை, கடல் காகம், கடல் ஆலா, உள்ளான் உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து குவிந்துள்ளன.

பறவைகள் சரணாலயத்தில் கூட்டம், கூட்டமாக அமர்ந்துள்ள பறவைகளை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது. இந்த பறவைகளை இரட்டைதீவு, கோவை தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் சிறகடித்து பறக்கும் பறவைகளை காலை, மாலை கண்டு ரசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கண்கொள்ளா காட்சி!: கோடியக்கரை சரணாலயத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள்.. கூட்டம், கூட்டமாக சிறகடித்து உற்சாகம்..!! appeared first on Dinakaran.

Tags : Kodiakarai ,Nagai ,Kodiakarai Bird Sanctuary ,Kodiyakarai ,Vedaranyam ,Dinakaran ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...