×

திருவேற்காடு நகராட்சியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

திருவள்ளூர், நவ. 17: திருவேற்காடு நகராட்சியில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகள் குறித்து மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் ஆய்வு மேற்கொண்டார். பூந்தமல்லி அடுத்த திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையால் அதிகம் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளாக திருவேற்காடு கூட்டுறவு நகர், நூம்பல் தாய் மூகாம்பிகை நகர், அயனம்பாக்கம் ஐஸ்வர்யா நகர், கோலடி மற்றும் அயப்பாக்கம் ஆகிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அப்பகுதிகளை மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்காத வகையிலும் தேங்கிய மழை நீரை உடனடியாக அகற்றுவதற்கான வடிகால் அமைப்புகளை ஏற்படுத்துவது குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இந்த ஆய்வின் போது அயனம்பாக்கம் முதல் கோலடி வரையிலான சாலையில் உள்ள மேல் அயனம்பாக்கம் ஈ.ஜி.பி.நகர் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கழிவுநீர் கசிந்து வழிந்தோடி சாலையில் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதை கண்டறிந்து, உடனடியாக அக்குடியிருப்புவாசிகளுக்கு கலெக்டர் அபராதம் விதித்து அறிவுரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, இந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின் நடவடிக்கை போன்று வேறு எந்த பகுதியிலும் நடைபெறாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் தநகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, பூந்தமல்லி வட்டாட்சியர் மாலினி, நகராட்சி சுகாதார அலுவலர் ஆல்பர்ட், சுகாதார ஆய்வாளர்கள் பிரகாஷ், முனுசாமி, பொதுப்பணி மேற்பார்வையாளர் ரங்கசாமி, உதவி பொறியாளர்கள் (நீர்வளத்துறை) ரவிச்சந்திரன், தனசேகர், சுகாதார ஆய்வாளர்கள் பிரகாஷ், முனுசாமி, பொதுப்பணி மேற்பார்வையாளர் ரங்கசாமி. மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவேற்காடு நகராட்சியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Thiruvekadu Municipality ,Thiruvallur ,District Collector ,T. Prabhu Shankar ,Northeast Monsoon ,Tiruvekadu Municipality ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...