×

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து மேலும் சரிவு

கிருஷ்ணகிரி, நவ.17: கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்ததால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 1120 கனஅடியாக அதிகரித்தது. தற்போது மழை சற்று தணிந்துள்ளதால், கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 646 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து ஆற்றில் விநாடிக்கு 560 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில், தற்போது 24.35 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு, நேற்று முன்தினம் 632 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 609 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 672 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது 50.30 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

The post கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து மேலும் சரிவு appeared first on Dinakaran.

Tags : Kelavarapalli Dam ,Krishnagiri ,Tenpenna River ,Karnataka ,Osur Kelavarapalli ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் பூச்சிக்கொல்லிகளை ரசீது...