×

குளச்சலில் பைக் திருடிய வாலிபர் கைது

குளச்சல்,நவ 17 : குளச்சல் சன்னதி தெருவை சேர்ந்தவர் புருசோத்தமன் (48).இவர் குளச்சலில் ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று இவர் அருகில் உள்ள மழலையர் பள்ளிக்கு அலுவல் விஷயமாக செல்வதற்கு பைக்கை பள்ளி முன்பு நிறுத்தி விட்டு சென்றார்.சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. மர்ம நபர் யாரோ? திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து புருசோத்தமன் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக்கை திருடி சென்ற மர்ம நபரை தேடி வந்த நிலையில் தக்கலை புலியூர்க்குறிச்சி பகுதியை சேர்ந்த இளைஞர் சுதி(21)என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பைக்கை மீட்டனர்.

The post குளச்சலில் பைக் திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kulachal ,Purusottaman ,Sannathy Street, Kulachal ,Dinakaran ,
× RELATED வெள்ளிச்சந்தை அருகே பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது