×

கோவையில் நாளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு கூட்டம்

 

கோவை, நவ. 17: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள “டாப் இன் டவுன்’’ ஓட்டலில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன் தலைமை தாங்குகிறார்.

இதில், மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும், மாநில முதன்மை துணை தலைவருமான எம்.அப்துல் ரகுமான், மாநில துணை தலைவர் கே.நவாஸ் கனி, மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜகான் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று பேசுகிறார்கள்.

மேலும், அனைத்து மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், மாநில நிர்வாகிகள், இளைஞர் அணி, தொழிலாளர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி மாநில நிர்வாகிகள் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்கின்றனர். இக்கூட்டத்தில், தற்போதைய அரசியல் நிலைமை, சமூக நல்லிணக்கம், மண்டல வாரியாக பயிலரங்கம், தேசிய ஒருமைப்பாடு குறித்த முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post கோவையில் நாளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Indian Union Muslim League ,Coimbatore ,Indian Union Muslim League Coimbatore North District ,Mubarak ,Dinakaran ,
× RELATED திமுக கூட்டணியில் இந்திய யூனியன்...