×

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட தேசிய இளைஞர் விழா

 

கோவை, நவ.17: கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக நாட்டுநலப்பணித் திட்டத்தின் சார்பில் தேசிய இளைஞர் விழாவிற்கான மாவட்ட அளவிலான தேர்வு நிகழ்ச்சி அக்கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பவானீஸ்வரி குத்து விளக்கேற்றி இந்நிகழ்வை துவக்கி வைத்து, திருச்சியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவிற்கான முன் அணிவகுப்பு முகாமில் தமிழ்நாடு சார்பில் கலந்துகொண்ட இக்கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுபாஷினி மற்றும் மாணவி என்.வி.பவ்யா ஆகியோருக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.

இதில், எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார், நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ்.பிரகதீஷ்வரன், பாரதியார் பல்கலைக்கழக நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.அண்ணாதுரை மற்றும் பாரதியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளைச் சார்ந்த நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட தேசிய இளைஞர் விழா appeared first on Dinakaran.

Tags : National Youth Festival of National Welfare Program ,Sri Ramakrishna College of Arts and Sciences ,Coimbatore ,Sri Ramakrishna College of Arts and Science ,Bharatiyar ,National Youth Festival ,Sri Ramakrishna Arts and Science College ,
× RELATED முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது