×

கார்த்திகை மாதத்தை முன்னிட்டு மாலை விற்பனை மும்முரம்

சிவகங்கை, நவ.17: ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி மாலை அணிந்து, இருமுடி கட்டி சபரி மலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம். இன்று கார்த்திகை மாதம் 1ம் தேதி என்பதால் ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் நீராடிவிட்டு விநாயகர் கோவில் மற்றும் குருசாமிகளிடம் சென்று துளசி மாலை, சிறிய ருத்ராட்ச மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

மேலும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவதற்காக கடைகளில் துளசி மாலை, ருத்ராட்ச மாலை, முத்துமணி மாலை, ஐயப்பன், விநாயகர் டாலர்கள் வாங்குவதற்காக சிவகங்கை காந்தி வீதி, நேரு பஜார் பகுதிகளில் கடைகளில் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இதனால் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் விரதம் தொடங்கும் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் வாங்கி செல்கின்றனர். இந்த கடைகளில் துளசி மாலை மற்றும் முத்து மணி மாலைகள், காவி, பச்சை மற்றும் கருப்பு நிற வேஷ்டிகள் பூஜைக்கு பயன்படுத்தும் பத்தி, சூடம், சந்தனம், குங்குமம், ஜவ்வாது போன்ற விற்பனையும் படுஜோராக நடந்தது.

The post கார்த்திகை மாதத்தை முன்னிட்டு மாலை விற்பனை மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Karthik ,Sivagangai ,Ayyappa ,Karthikai ,Sabari Hill ,
× RELATED அரசாணை விதிகளை பின்பற்றி மணல் விற்பனை...