×

மின்னணு கழிவு விதிகள் மீறப்பட்டால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அபராதம் விதிப்பு

சிவகங்கை, நவ.17: மின்னணு கழிவு(மேலாண்மை) விதிகள் மீறப்பட்டால், அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், ஒன்றிய அரசின் மின்னணு கழிவு(மேலாண்மை) விதிகள் 2016 முதல் நடைமுறைபடுத்தப்பட்டது. இந்த விதியின்படி, அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவுகளை பிரித்தெடுப்போர், மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவு புதுப்பிப்பாளர்களால் மட்டுமே மின்கழிவுகளைச் சேகரித்து செயலாக்க முடியும்.

மேலும், நீட்டிக்கபட்ட உற்பத்தியாளர் பொறுப்பு சான்றிதழ் பெற்ற உற்பத்தியாளர்கள் மின் கழிவுகளை சேகரித்து அதனை அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவுகளை பிரித்தெடுப்போர், மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவு புதுப்பிப்பாளர்களுக்கு அனுப்ப வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கைவிடப்பட்ட மின் கழிவு பொருட்களைச் சேகரித்து, அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவுகளை பிரித்தெடுப்போர்கள் அல்லது மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவருக்கு அனுப்ப வேண்டும். விதிகள் மீறப்பட்டால் மின் பொருள் உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், மின் கழிவு இடமாற்றம் செய்வோர், பிரித்தெடுப்போர் மற்றும் மறுசுழற்சி செய்வோர் ஆகியோருக்கு தமிழ்நாடு மாசுகட்டுபாடு வாரியத்தால் அபராதம் விதிக்கப்படும்.

பொதுமக்கள் மற்றும் மின்கழிவுகளை கையாளுபவர்கள், ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அல்லது மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலுக்குப் பிறகு செயல்பட வேண்டும். மின் கழிவுகளை அங்கீகரிக்கப்பட்ட பிரித்தெடுப்போர் மற்றும் மறுசுழற்சி செய்பவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
பிரித்தெடுத்தல் மற்றும் மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைகளின் விபரங்கள் வாரியத்தின் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மின்னணு கழிவு விதிகள் மீறப்பட்டால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Pollution Control Board ,Sivagangai ,Tamil Nadu Pollution Control Board ,Dinakaran ,
× RELATED விதிகளை மதிக்காத நிறுவனங்களை இனி...