×

பட்டாசு வெடித்ததில் தகராறு வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது: போலீசிடம் இருந்து தப்ப முயன்றபோது காயம்

 

சிவகாசி, நவ.17: சிவகாசி அருகே பட்டாசு வெடித்த தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் பொன்பாண்டி(23). பட்டாசு வெடித்த தகறாறில் கடந்த 13ம் தேதி கோடாரியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டாார். இந்த கொலை வழக்கு சம்பந்தமாக வடமலாபுரம் அண்ணா காலனியை சேர்ந்த கார்த்திக்(எ) குண்டு கார்த்திக்(30), நமஸ்கரித்தான்பட்டி கீழுரை சேர்ந்த மாரிமுத்து(26), ஊளையன்(எ)வீரபாண்டி(26) உட்பட 5 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

மேலும் 3 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று வடமலாபுரம் பகுதியில் பதுங்கி இருந்த முனியாண்டி மகன் முத்தையா(எ) கஜா(24) என்பவரை கைது செய்தனர். நேற்று முன்தினம் திருநெல்வேலியில் கைது செய்யப்பட்ட கார்த்திக்(எ) குண்டு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. திருநெல்வேலியில் பதுங்கி இருந்த கார்த்திக்கை போலீஸ் விரட்டும் போது அவர் கீழே விழுந்து காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

The post பட்டாசு வெடித்ததில் தகராறு வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது: போலீசிடம் இருந்து தப்ப முயன்றபோது காயம் appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,
× RELATED போலீஸ் ஸ்டேஷன்களில் மேயர் திடீர் ஆய்வு