- கொடலி கருபூர் அரசு உயர் மேல்நிலைப் பள்ளி
- தப் பவூர்.
- தாபேளூர்
- மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி
- கொடலி கருப்பூர் அரசு உயர் செகண்டரி பள்ளி
- அரியலூர் மாவட்டம்
- அரியலூர்…
- கொடலி கருப்பூர் அரசு உயர் மேல்நிலைப் பள்ளி
- தின மலர்
தா.பழூர்,நவ.17: அரியலூர் மாவட்டம் கோடாலி கருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகிலுள்ள கோடாலி கருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார். ஆய்வில் ஒவ்வொரு வகுப்பறையிலும் சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதம். அதனை மாணவர்கள் புரிந்து கொள்கின்றனரா? வகுப்பில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கொடுத்த எழுத்து தேர்வு அதனை ஆய்வு செய்து மாணவர்களின் திறனை ஆய்வு செய்தார்.
மாலையில் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி அதன் மூலம் மாணவர்களுக்கு எவ்வாறு எளிதில் படம் நடத்த முடியும் எப்படி மாணவர்களிடம் புரிந்து கொள்ளுதலில் ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுதல் உள்ளிட்ட நிறை குறைகளை ஆசிரியர்களிடம் எடுத்துக் கூறி அதனை சரி செய்யவும் அறிவுறுத்தினார். இறுதியில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி நட்டு வைத்தார்.
மேலும் மாவட்ட கல்வி அலுவலரிடம் மாணவர் ஒருவர் சிற்றிலக்கியங்களை மனப்பாடமாக ஒப்பி வைத்ததால் அவரை சால்வை அணிவித்து பாராட்டினார். ஆய்வில் மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா பள்ளி துணை ஆய்வாளர்கள் செல்வகுமார், பழனிச்சாமி, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகலீசன் மற்றும் தலைமை ஆசிரியர் சக்கரவர்த்தி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
The post தா.பழூர் அருகே கோடாலி கருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக்கல்வி அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.