பெரம்பலூர்,நவ.17: தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினராக பெரம்பலூரை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் எழுத்தாளர் இரா.எட்வின் நியமனம். தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினராக பெரம்பலூரை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும், எழுத்தாளரும், பட்டிமன்ற நடுவருமான இரா.எட்வின் என்பவரை, தமிழ்நாடு பள்ளி கல்வி துறை அமைச்சரும், தமிழ் நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து வரும் 30ம்தேதி சென்னை கோட்டூர் புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக மாநாட்டுக் கூடத்தில் நடைபெறும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் எட்வின் பொறுப்பேற்கிறார். கவிஞர்.எட்வினுக்கு பெரம்பலூர் திமுக மாவட்ட செயலாளர் குன்னம் இராஜேந்திரன், எம்எல்ஏ பிரபாகரன், மா. கம்யூ. மாவட்ட செயலாளர் ரமேஷ், மக்களுக்கான மருத்துவர் கழகம் மாநில செயலாளர் டாக்டர் கருணாகரன், இந்திய தொழிற் சங்க மாவட்ட செயலாளர் அகஸ்டின்,. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.எம்.சக்திவேல், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் இராம கிருஷ்ணன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கலையரசி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
The post பெரம்பலூர் ஓய்வு தலைமை ஆசிரியர் மாநில பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினராக நியமனம் appeared first on Dinakaran.