×

ஓய்வுபெற்ற அரசு ஊழியரை ஆபாசமாக பேசிய முன்னாள் பாஜ நிர்வாகி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு: போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை: கே.கே.நகரில் அனுமதியின்றி வீட்டின் முன்பு பாஜ கொடி கம்பம் அமைக்க முயன்றதை தட்டிக்கேட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியரை ஆபாசமாக பேசிய, முன்னாள் பாஜ நிர்வாகி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சென்னை கே.கே.நகர் அய்யாவு புரத்தை சேர்ந்தவர் ஜெயராமன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது வீட்டின் முன்பு அதே பகுதியை சேர்ந்த முன்னாள் பாஜ நிர்வாகி ராமலிங்கம் என்பவர், எந்தவித முன்அனுமதியும் இன்றி பாஜ கொடி கம்பம் நட முயற்சி செய்து, அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து ஜெயராமன் தனது வீட்டின் முன்பு பாஜ கொடி கம்பம் நடக்கூடாது.

இது பொது இடம் இல்லை. என்னுடைய நிலம் என்று கூறியுள்ளார். இதனால் ஜெயராமனுக்கும், ராமலிங்கத்திற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த ராமலிங்கம், ஜெயராமனின் சாதி பெயரை கூறி மிகவும் ஆபாசமாக பொதுமக்கள் முன்பு பேசியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து ஜெயராமன் கே.கே.நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ஓய்வு பெற்ற அரசு ஊழியரை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்ட முன்னாள் பாஜ நிர்வாகி ராமலிங்கம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கே.ேக.நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஓய்வுபெற்ற அரசு ஊழியரை ஆபாசமாக பேசிய முன்னாள் பாஜ நிர்வாகி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு: போலீசார் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : BJP ,Chennai ,KK Nagar ,Baj ,Dinakaran ,
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!