×

கார் மீது லாரி மோதி விபத்து 5 பேர் பலி

தாராபுரம்: கோவை பெரியநாயக்கன்பாளையம் வஞ்சியம்மன் நகரை சேர்ந்தவர் தமிழ்மணி (51). இவரது மனைவி சித்ரா (49). நர்ஸ். திண்டுக்கல் கிருஷ்ண ஐயர் வீதியை சேர்ந்த குமாரசாமி என்பவர் மனைவி கலா ராணி (50). தாராபுரம் உடுமலை சாலையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (75). இவரது மனைவி செல்வராணி (50) ஆகியோர் பழனியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு கோவைக்கு நேற்று மாலை 4.45 மணி அளவில் திரும்பி கொண்டிருந்தனர்.

காரை தமிழ்மணி ஓட்டி வந்துள்ளார். தாராபுரம் அருகே அலங்கியம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மனக்கடவு என்ற இடம் அருகே கார் வந்தபோது எதிரே கோவையிலிருந்து டீசல் லோடு ஏற்றி வந்த டேங்கர் லாரி கார் மீது மோதியது. இதில் காரில் இருந்த தமிழ்மணி, பாலகிருஷ்ணன், சித்ரா, செல்வராணி, கலா ராணி ஆகியோர் சம்பவ இடத்தில் பலியாகினர்.

The post கார் மீது லாரி மோதி விபத்து 5 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Tharapuram ,Tamilmani ,Periyanayakanpalayam Vanjiamman Nagar, Coimbatore ,Chitra ,Dindigul Krishna ,
× RELATED கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு...