×

கடனா நீர்த்தேக்கத்தில் இருந்து நாளை முதல் அடுத்தாண்டு மார்ச் 31 வரை நீர் திறக்க உத்தரவு

சென்னை: தென்காசி மாவட்டம் கடனா நீர்த்தேக்கத்தில் இருந்து நாளை முதல் அடுத்தாண்டு மார்ச் 31 வரை நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்களுக்கு நாளை முதல் 136 நாட்களுக்கு 125 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க ஆணையிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில்;

தென்காசி மாவட்டம் மற்றும் வட்டம், அரசபத்து வடகுறுவபத்துகால், ஆழ்வார்குறிச்சி தென்கால், ஆம்பூர் பெருங்கால், மஞ்சம்புளிகால், காக்கநல்லூர் கால், காங்கேயன்கால் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்களுக்கு பிசான சாகுபடிக்கு கடனா நீர்த்தேக்கத்திலிருந்து 17.11.2023 முதல் 31.03.2024 வரை 136 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 125 கன அடி அளவுக்கு மிகாமல் பாசனபருவகாலத்தின் மொத்த தேவையான தண்ணீர் அளவான 1653.87 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் தென்காசி மாவட்டத்தில் 9923.22 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கடனா நீர்த்தேக்கத்தில் இருந்து நாளை முதல் அடுத்தாண்டு மார்ச் 31 வரை நீர் திறக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Katana reservoir ,Chennai ,Tenkasi District ,Kadana Reservoir ,Dinakaran ,
× RELATED வீடு புகுந்து டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் சேதம்