×

கொரேனா காலத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர்களுக்கு உரிமையுண்டு: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு கருத்து

சென்னை: கொரேனா காலத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற உரிமை உண்டு என்று சென்னை உயார்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பயிற்சி மருத்துவர்களுக்கு 15 நாட்களில் கோவிட் பணி சான்று வழங்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் கொரோனாவின்போது பணியாற்றியவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் தந்த அரசாணையை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பயிற்சி மருத்துவர்கள் 10 நாட்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோவிட் பணி சான்றிதழ் கோரலாம் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் காலியாக இருந்து 1021 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்களை வரவேற்று தமிழ்நாடு மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதற்கான தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிலையில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா காலத்தில் பணியாற்றிய தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி அரசு மருத்துவமனைகளில் கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் அதற்கு கோவிட் பணி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் எனவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தாங்களும் கொரோனா காலத்தில் பணியாற்றியதாக கூறி இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தனியார் மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதே போல கொரோனா காலத்தில் பணியாற்றிய தங்களுக்கு கோவிட் பணி சான்றிதழ் வழங்க மறுத்ததை எதிர்த்து அரசு மருத்துவமனையில் பணியாற்றக்கூடிய பயிற்சி மேற்படிப்பு மாணவர்களும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, கொரேனா காலத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற உரிமை உண்டு என்று தெரிவித்துள்ளது. பயிற்சி மருத்துவர்கள் 10 நாட்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோவிட் பணி சான்றிதழ் கோரலாம் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. பயிற்சி மருத்துவர்களுக்கு 15 நாட்களில் கோவிட் பணி சான்று வழங்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post கொரேனா காலத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர்களுக்கு உரிமையுண்டு: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு கருத்து appeared first on Dinakaran.

Tags : Corona ,Madras High Court ,Chennai ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED பள்ளிகளில் உட்கட்டமைப்பு பணிகளுக்காக...