×

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் ராக்கெட் பாகம் பூமியில் விழுந்தது

ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் ராக்கெட் பாகம் பூமியில் விழுந்தது. விண்ணில் ஏவப்பட்டு 124 நாட்களுக்குப் பின் வடக்கு பசிபிக் கடல்பகுதியில் ராக்கெட் பாகம் விழுந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15ல் கிரையோஜெனிக் என்ஜினின் மேல்பகுதி புவி ஈர்ப்பு விசைக்குள் வந்து பூமியின் காற்று மண்டல பகுதிக்குள் நுழைந்தது. புவி மண்டல பகுதிக்குள் வந்த ராக்கெட் பாகம், பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு விழுந்திருக்கலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது.

நிலவு குறித்தான விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லை எட்டிய சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென்துருவதில் தரையிறங்கியது மட்டுமின்றி நிலவின் தென்துருவ அமைப்பு குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்திருந்தது.

இந்த வகையில் சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம் ராக்கெட் மூலமாக விண்ணில் சீறிப்பாய்ந்த நிலையில் ராக்கெட்டின் உதிரி பாகங்கள் பல்வேறு அடுக்குகளாக பிரிந்து பூமியில் இருந்து வெளியேற்றப்பட்டது. பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து வெளியேறிய ராக்கெட்டின் உதிரி பாகங்கள் கிரையோஜெனிக் என்ஜினின் பயன்படுத்தி தொடர்ச்சியாக நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு சென்று அதன் பின் நிலவில் தரையிறங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் குறிப்பிட்ட ராக்கெட்டின் பாகங்கள் புவியீர்ப்பு வளிமண்டல அடுக்கிற்குள் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு பசிபிக் பெருங்கடலில் சந்திரயான்-3 விண்கலத்தின் உதிரி பாகங்கள் 2.42 மணியளவில் விழுந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் ராக்கெட் பாகம் பூமியில் விழுந்தது appeared first on Dinakaran.

Tags : South Pole of the Moon ,Earth ,Sriharikota ,Dinakaran ,
× RELATED நிலவுக்கு விண்கலத்தை ஏவியது சீனா