×

உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து: 5வது நாளாக தொடரும் மீட்பு பணிகளை பார்வையிட்டார் ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங்

உத்தராகண்ட்: உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் இடிபாடுகளில் சிக்கி உள்ள 40 தொழிலாளர்களை மீட்க ராட்சச பாறைகளில் துளையிடும் நவீன ட்ரில் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. உத்தரகாசி அருகே சில்கியாரா சுரங்கப்பாதை கட்டுமான பனியின் போது ஏற்பட்ட விபத்தில் 96 மணி நேரத்திற்கு மேலாக இடிபாடுகளில் சிக்கி உள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணியில் வேகம் எடுத்துள்ளன.

கடந்த 54 நாட்களுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. குடிநீர் உணவு ஆகியவையும் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் மீட்பு பணிகளை பார்வையிட்ட ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் பழைய இயந்திரங்கள் அகற்றப்பட்டு பாறையை துளையிடும் பணியில் அதிநவீன இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக கூறினார். டெல்லியிலிருந்து கொண்டுவரப்பட்ட அமெரிக்கன் அகர் என்ற அதிநவீன இயந்திரம் துளையிடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மூன்றடி சுற்றளவு கொண்ட குழாயை துளை வழியாக செலுத்தி தொழிலாளர்களை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு தாய்லாந்தில் குகை ஒன்றில் சிக்கிய குழந்தைகளை வெற்றிகரமாக மீட்ட தாய்லாந்து மற்றும் நார்வே மீட்பு படையினரும் உத்தரகண்ட் மீட்பு பணியில் இணைந்துள்ளனர். இதை அடுத்து 24 மணி நேரத்துக்குள் சுரங்க இடிபாடுகளிலிருந்து தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து: 5வது நாளாக தொடரும் மீட்பு பணிகளை பார்வையிட்டார் ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் appeared first on Dinakaran.

Tags : Uttarakhand tunnel accident ,Union Minister ,VK Singh ,Uttarakhand ,Dinakaran ,
× RELATED வடசென்னை பாஜ வேட்பாளர்...