×

சென்னையில் ஒரே வாரத்தில் 23 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறை நடவடிக்கை

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவில் நவம்பர் 9 – நவம்பர் 15 வரை நடத்திய சோதனையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஜனவரி 1 முதல் நவம்பர் 15 வரை பல்வேறு குற்ற வழக்குகளில் 588 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்புடைய நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை காவல்துறை அவர்களை சிறையில் அடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் 23 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறது.

பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக, திருட்டு, செயின் பறிப்பு, வழிப்பறி, பணமோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்புடைய 402 குற்றவாளிகள் இருக்கும்பட்சத்தில், ஒரு வாரத்தில் குறிப்பிட்ட அதிக குற்றங்கள் புரிந்த நபர்கள் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது.

குறிப்பாக ரூபேஷ், சூர்யா, ஆனந்தன், பிரகாஷ், நவீன் உள்ளிட்ட 23 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு குற்றச்சம்பவங்கள் ஈடுபடக்கூடிய நபர்கள், 3க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது வழக்கம்.

பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் நவம்பர் 9 – நவம்பர் 15 வரை நடத்திய சோதனையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஜனவரி 1 முதல் நவம்பர் 15 வரை பல்வேறு குற்ற வழக்குகளில் 588 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post சென்னையில் ஒரே வாரத்தில் 23 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...