×

காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா மகாராஜபுரம் கிராமத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் ஊதியம் வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐ.என்.டி.யு.சி விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். எஸ்சி, எஸ்டி பிரிவு வட்டார தலைவர் சீனிவாசகம், கூமாப்பட்டி நகரத் தலைவர் சுந்தரம், எஸ்சி, எஸ்டி பிரிவு மாவட்டத் தலைவர் ராமர், வத்திராயிருப்பு நகரத் தலைவர் ஆட்டோ செல்வம் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு ஒன்றிய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

 

The post காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress party ,Vathirairipu ,Congress ,government ,Maharajapuram ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள்...