×

ஆசிரியர் பணிக்கு வயது வரம்பை நீக்க வேண்டும் தேர்வர்கள் கோரிக்கை

ஆண்டிபட்டி: குரூப் 2 தேர்வை போல் ஆசிரியர் பணிக்கும் வயது வரம்பை நீக்க வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் பள்ளிகளில் ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு பொது பிரிவினருக்கு 45 வயதும், இதர பிரிவினருக்கு 50 வயதும் என கல்வித்துறை சமீபத்தில் புதிய ஆணை பிறப்பித்துள்ளது. இச்சலுகை 2 ஆண்டுகள் கொரோனா தொற்றின் காரணமாக சிறப்பு சலுகை என்றும், வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.1.2023 முதல் பொது பிரிவினருக்கு 42 வயதும், இதர பிரிவினருக்கு 47 எனவும் நிர்ணயிக்கப்படடுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த அறிவிப்பு 1975க்கு முன்பு பி.எட். படித்தவர்களுக்கு ஆசிரியர் பணிக்கான வாய்ப்பாக இல்லை என தேர்வர்கள் புலம்பி வருகின்றனர்.

The post ஆசிரியர் பணிக்கு வயது வரம்பை நீக்க வேண்டும் தேர்வர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Antipatti ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திருந்திய நெல் சாகுபடியில் தொழில்நுட்பங்கள் வேளாண்துறை ஆலோசனை