×

வெள்ளக்கோவில் பகுதியில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் நிலவும் குளறுபடி

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் வட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கால்நடைகளை வளர்த்து அதை வைத்து வாழ்ந்து வருகின்றனர், தற்போது மழைக்காலம் என்பதால் கால்நடைகளை நோய் தாக்கும் வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் முறையாக கால்நடை மருத்துவம் படிக்காத நபர்களை கொண்டு, கால்நடைகளுக்கு தடுப்பூசி, சினை ஊசி, நோய் எதிர்ப்பு சக்தி ஊசி மற்றும் மருந்து மாத்திரைகள் கோழி, ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளுக்கு வழங்கப்படுவதாக தன்னார்வலர்கள் குற்றச்சாட்டு கூறுகின்றனர், முறையாக மருத்துவம் படிக்காமல் சிகிச்சை வழங்குவதால் கால்நடைகளுக்கு பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது, ஆகையால் கால்நடைத்துறை அதிகாரிகள், மருத்துவம் படிக்காமல் சிகிச்சை வழங்கும் போலியான நபர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

The post வெள்ளக்கோவில் பகுதியில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் நிலவும் குளறுபடி appeared first on Dinakaran.

Tags : Valakovo ,Vilaco ,Malakko ,Dinakaran ,Veliko ,
× RELATED வெள்ளக்கோவில் நகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு பட்டுப்புடவை