×

குழந்தைகள் தின விழாவில் அரசு பள்ளியில் மரக்கன்று நடுதல்

காளையார்கோவில்: காளையார்கோவில் அரசு மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் லதா தலைமை தாங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர் பாராளுமன்றம் மாணவர்களால் நடத்தப்பட்டது. சுமார் 450 மாணவர்கள். ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மதியம் உணவு அளிக்கப்பட்டது. குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர் முன்னிலையில் சாரண ஆசிரியர் நாகராஜன் ஏற்பாட்டில் பள்ளி வளாகத்தில் சாரண மாணவர்கள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் அலுவலர்கள் சேர்ந்து மரக்கன்றுகளை நட்டனர்.

The post குழந்தைகள் தின விழாவில் அரசு பள்ளியில் மரக்கன்று நடுதல் appeared first on Dinakaran.

Tags : Government School ,Children's Day Ceremony ,Bulyargo ,Children's Day ,Government High School ,Jospin ,Dinakaran ,
× RELATED திருவேற்காடு அரசு பள்ளியில் 48...