×

குனியமுத்தூரில் இன்று மின்தடை

கோவை: கோவை மின் பகிர்மான வட்டம் (தெற்கு) செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குனியமுத்தூர் கோட்டத்திற்குட்பட்ட குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மின் பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. அதன் விவரம்: சிட்கோ, மதுக்கரை, குறிச்சி, ஹவுசிங் யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்ஐசி காலனி, மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post குனியமுத்தூரில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Tags : Kuniyamuthur ,Coimbatore ,Coimbatore Power Distribution Circle (South) Executive Engineer's Office ,Dinakaran ,
× RELATED முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது