×

மலையான்குளம் யூனியன் பள்ளியில் பவள விழா

வீரவநல்லூர்,நவ.16: சேரன்மகாதேவி அடுத்த மலையான்குளம் கிராமத்தில் கடந்த 1945ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டு 78 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் பவள விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியை முத்துசெல்வி தலைமை வகித்தார். சேரன்மகாதேவி வட்டார கல்வி அலுவலர்கள் கீதா, உமாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ராமலெட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக சேரன்மகாதேவி யூனியன் சேர்மன் பூங்கோதை குமார், மாவட்ட கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி ஆகியோர் கலந்துகொண்டு பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் சிவராஜ், உதவி திட்ட அலுவலர் கோமதி சங்கரி, திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பண்டாரசிவன், ஊராட்சி மன்ற தலைவி சித்ரா, இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புஷ்பா ஹெப்சிபாய், டிவிஎஸ் சீனிவாசன் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post மலையான்குளம் யூனியன் பள்ளியில் பவள விழா appeared first on Dinakaran.

Tags : Coral Festival ,Malayankulam Union ,School ,Veeravanallur ,Panchayat Union Primary School ,Malayankulam ,Cheranmahadevi ,Malayankulam Union School Coral Festival ,Dinakaran ,
× RELATED அரசாணை வெளியீடு பள்ளி மேலாண்மைக்குழு பதவிக்காலம் நீட்டிப்பு