×

விவசாயியை சரமாரி தாக்கிய 3பேர் கைது

போச்சம்பள்ளி, நவ.16: போச்சம்பள்ளி அருகே உள்ள சாமலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(53), விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான சபாபதி. இருவருக்கும் நிலம் சம்பந்தமான முன்விரோத தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று, மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில், சிவக்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் 13 தையல் போடப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அவர் போச்சம்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சபாபதி(53), வெங்கடேசன் (40), மணிவண்ணன் (35) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

The post விவசாயியை சரமாரி தாக்கிய 3பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Bochambally ,Sivakumar ,Chamalambatti ,Dinakaran ,
× RELATED கரும்பு தோட்டத்தில் திடீர் தீ விபத்து